< 2 கொரிந்தியர் 11 >

1 என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
யூயம்’ மமாஜ்ஞாநதாம்’ க்ஷணம்’ யாவத் ஸோடு⁴ம் அர்ஹத², அத​: ஸா யுஷ்மாபி⁴​: ஸஹ்யதாம்’|
2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
ஈஸ்²வரே மமாஸக்தத்வாத்³ அஹம்’ யுஷ்மாநதி⁴ தபே யஸ்மாத் ஸதீம்’ கந்யாமிவ யுஷ்மாந் ஏகஸ்மிந் வரே(அ)ர்த²த​: க்²ரீஷ்டே ஸமர்பயிதும் அஹம்’ வாக்³தா³நம் அகார்ஷம்’|
3 ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.
கிந்து ஸர்பேண ஸ்வக²லதயா யத்³வத்³ ஹவா வஞ்சயாஞ்சகே தத்³வத் க்²ரீஷ்டம்’ ப்ரதி ஸதீத்வாத்³ யுஷ்மாகம்’ ப்⁴ரம்’ஸ²​: ஸம்ப⁴விஷ்யதீதி பி³பே⁴மி|
4 எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.
அஸ்மாபி⁴ரநாக்²யாபிதோ(அ)பர​: கஸ்²சித்³ யீஸு² ர்யதி³ கேநசித்³ ஆக³ந்துகேநாக்²யாப்யதே யுஷ்மாபி⁴​: ப்ராக³லப்³த⁴ ஆத்மா வா யதி³ லப்⁴யதே ப்ராக³க்³ரு’ஹீத​: ஸுஸம்’வாதோ³ வா யதி³ க்³ரு’ஹ்யதே தர்ஹி மந்யே யூயம்’ ஸம்யக் ஸஹிஷ்யத்⁴வே|
5 மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன்.
கிந்து முக்²யேப்⁴ய​: ப்ரேரிதேப்⁴யோ(அ)ஹம்’ கேநசித் ப்ரகாரேண ந்யூநோ நாஸ்மீதி பு³த்⁴யே|
6 நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே.
மம வாக்படுதாயா ந்யூநத்வே ஸத்யபி ஜ்ஞாநஸ்ய ந்யூநத்வம்’ நாஸ்தி கிந்து ஸர்வ்வவிஷயே வயம்’ யுஷ்மத்³கோ³சரே ப்ரகாஸா²மஹே|
7 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ?
யுஷ்மாகம் உந்நத்யை மயா நம்ரதாம்’ ஸ்வீக்ரு’த்யேஸ்²வரஸ்ய ஸுஸம்’வாதோ³ விநா வேதநம்’ யுஷ்மாகம்’ மத்⁴யே யத்³ அகோ⁴ஷ்யத தேந மயா கிம்’ பாபம் அகாரி?
8 உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
யுஷ்மாகம்’ ஸேவநாயாஹம் அந்யஸமிதிப்⁴யோ ப்⁴ரு’தி க்³ரு’ஹ்லந் த⁴நமபஹ்ரு’தவாந்,
9 நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன்.
யதா³ ச யுஷ்மந்மத்⁴யே(அ)வ(அ)ர்த்தே ததா³ மமார்தா²பா⁴வே ஜாதே யுஷ்மாகம்’ கோ(அ)பி மயா ந பீடி³த​: ; யதோ மம ஸோ(அ)ர்தா²பா⁴வோ மாகித³நியாதே³ஸா²த்³ ஆக³தை ப்⁴ராத்ரு’பி⁴ ந்யவார்ய்யத, இத்த²மஹம்’ க்காபி விஷயே யதா² யுஷ்மாஸு பா⁴ரோ ந ப⁴வாமி ததா² மயாத்மரக்ஷா க்ரு’தா கர்த்தவ்யா ச|
10 ௧0 அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.
க்²ரீஷ்டஸ்ய ஸத்யதா யதி³ மயி திஷ்ட²தி தர்ஹி மமைஷா ஸ்²லாகா⁴ நிகி²லாகா²யாதே³ஸே² கேநாபி ந ரோத்ஸ்யதே|
11 ௧௧ இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார்.
ஏதஸ்ய காரணம்’ கிம்’? யுஷ்மாஸு மம ப்ரேம நாஸ்த்யேதத் கிம்’ தத்காரணம்’? தத்³ ஈஸ்²வரோ வேத்தி|
12 ௧௨ மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
யே சி²த்³ரமந்விஷ்யந்தி தே யத் கிமபி சி²த்³ரம்’ ந லப⁴ந்தே தத³ர்த²மேவ தத் கர்ம்ம மயா க்ரியதே காரிஷ்யதே ச தஸ்மாத் தே யேந ஸ்²லாக⁴ந்தே தேநாஸ்மாகம்’ ஸமாநா ப⁴விஷ்யந்தி|
13 ௧௩ அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள்.
தாத்³ரு’ஸா² பா⁴க்தப்ரேரிதா​: ப்ரவஞ்சகா​: காரவோ பூ⁴த்வா க்²ரீஷ்டஸ்ய ப்ரேரிதாநாம்’ வேஸ²ம்’ தா⁴ரயந்தி|
14 ௧௪ அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே.
தச்சாஸ்²சர்ய்யம்’ நஹி; யத​: ஸ்வயம்’ ஸ²யதாநபி தேஜஸ்விதூ³தஸ்ய வேஸ²ம்’ தா⁴ரயதி,
15 ௧௫ எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.
ததஸ்தஸ்ய பரிசாரகா அபி த⁴ர்ம்மபரிசாரகாணாம்’ வேஸ²ம்’ தா⁴ரயந்தீத்யத்³பு⁴தம்’ நஹி; கிந்து தேஷாம்’ கர்ம்மாணி யாத்³ரு’ஸா²நி ப²லாந்யபி தாத்³ரு’ஸா²நி ப⁴விஷ்யந்தி|
16 ௧௬ பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.
அஹம்’ புந ர்வதா³மி கோ(அ)பி மாம்’ நிர்ப்³போ³த⁴ம்’ ந மந்யதாம்’ கிஞ்ச யத்³யபி நிர்ப்³போ³தோ⁴ ப⁴வேயம்’ ததா²பி யூயம்’ நிர்ப்³போ³த⁴மிவ மாமநுக்³ரு’ஹ்ய க்ஷணைகம்’ யாவத் மமாத்மஸ்²லாகா⁴ம் அநுஜாநீத|
17 ௧௭ இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
ஏதஸ்யா​: ஸ்²லாகா⁴யா நிமித்தம்’ மயா யத் கதி²தவ்யம்’ தத் ப்ரபு⁴நாதி³ஷ்டேநேவ கத்²யதே தந்நஹி கிந்து நிர்ப்³போ³தே⁴நேவ|
18 ௧௮ அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன்.
அபரே ப³ஹவ​: ஸா²ரீரிகஸ்²லாகா⁴ம்’ குர்வ்வதே தஸ்மாத்³ அஹமபி ஸ்²லாகி⁴ஷ்யே|
19 ௧௯ நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே.
பு³த்³தி⁴மந்தோ யூயம்’ ஸுகே²ந நிர்ப்³போ³தா⁴நாம் ஆசாரம்’ ஸஹத்⁴வே|
20 ௨0 ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
கோ(அ)பி யதி³ யுஷ்மாந் தா³ஸாந் கரோதி யதி³ வா யுஷ்மாகம்’ ஸர்வ்வஸ்வம்’ க்³ரஸதி யதி³ வா யுஷ்மாந் ஹரதி யதி³ வாத்மாபி⁴மாநீ ப⁴வதி யதி³ வா யுஷ்மாகம்’ கபோலம் ஆஹந்தி தர்ஹி தத³பி யூயம்’ ஸஹத்⁴வே|
21 ௨௧ நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன்.
தௌ³ர்ப்³ப³ல்யாத்³ யுஷ்மாபி⁴ரவமாநிதா இவ வயம்’ பா⁴ஷாமஹே, கிந்த்வபரஸ்ய கஸ்யசித்³ யேந ப்ரக³ல்ப⁴தா ஜாயதே தேந மமாபி ப்ரக³ல்ப⁴தா ஜாயத இதி நிர்ப்³போ³தே⁴நேவ மயா வக்தவ்யம்’|
22 ௨௨ அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான்.
தே கிம் இப்³ரிலோகா​: ? அஹமபீப்³ரீ| தே கிம் இஸ்ராயேலீயா​: ? அஹமபீஸ்ராயேலீய​: | தே கிம் இப்³ராஹீமோ வம்’ஸா²​: ? அஹமபீப்³ராஹீமோ வம்’ஸ²​: |
23 ௨௩ அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன்.
தே கிம்’ க்²ரீஷ்டஸ்ய பரிசாரகா​: ? அஹம்’ தேப்⁴யோ(அ)பி தஸ்ய மஹாபரிசாரக​: ; கிந்து நிர்ப்³போ³த⁴ இவ பா⁴ஷே, தேப்⁴யோ(அ)ப்யஹம்’ ப³ஹுபரிஸ்²ரமே ப³ஹுப்ரஹாரே ப³ஹுவாரம்’ காராயாம்’ ப³ஹுவாரம்’ ப்ராணநாஸ²ஸம்’ஸ²யே ச பதிதவாந்|
24 ௨௪ யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்;
யிஹூதீ³யைரஹம்’ பஞ்சக்ரு’த்வ ஊநசத்வாரிம்’ஸ²த்ப்ரஹாரைராஹதஸ்த்ரிர்வேத்ராகா⁴தம் ஏகக்ரு’த்வ​: ப்ரஸ்தராகா⁴தஞ்ச ப்ரப்தவாந்|
25 ௨௫ மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன்.
வாரத்ரயம்’ போதப⁴ஞ்ஜநேந க்லிஷ்டோ(அ)ஹம் அகா³த⁴ஸலிலே தி³நமேகம்’ ராத்ரிமேகாஞ்ச யாபிதவாந்|
26 ௨௬ அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்;
ப³ஹுவாரம்’ யாத்ராபி⁴ ர்நதீ³நாம்’ ஸங்கடை ர்த³ஸ்யூநாம்’ ஸங்கடை​: ஸ்வஜாதீயாநாம்’ ஸங்கடை ர்பி⁴ந்நஜாதீயாநாம்’ ஸங்கடை ர்நக³ரஸ்ய ஸங்கடை ர்மருபூ⁴மே​: ஸங்கடை ஸாக³ரஸ்ய ஸங்கடை ர்பா⁴க்தப்⁴ராத்ரு’ணாம்’ ஸங்கடைஸ்²ச
27 ௨௭ பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
பரிஸ்²ரமக்லேஸா²ப்⁴யாம்’ வாரம்’ வாரம்’ ஜாக³ரணேந க்ஷுதா⁴த்ரு’ஷ்ணாப்⁴யாம்’ ப³ஹுவாரம்’ நிராஹாரேண ஸீ²தநக்³நதாப்⁴யாஞ்சாஹம்’ காலம்’ யாபிதவாந்|
28 ௨௮ இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது.
தாத்³ரு’ஸ²ம்’ நைமித்திகம்’ து³​: க²ம்’ விநாஹம்’ ப்ரதிதி³நம் ஆகுலோ ப⁴வாமி ஸர்வ்வாஸாம்’ ஸமிதீநாம்’ சிந்தா ச மயி வர்த்ததே|
29 ௨௯ ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ?
யேநாஹம்’ ந து³ர்ப்³ப³லீப⁴வாமி தாத்³ரு’ஸ²ம்’ தௌ³ர்ப்³ப³ல்யம்’ க​: பாப்நோதி?
30 ௩0 நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்.
யதி³ மயா ஸ்²லாகி⁴தவ்யம்’ தர்ஹி ஸ்வது³ர்ப்³ப³லதாமதி⁴ ஸ்²லாகி⁴ஷ்யே|
31 ௩௧ என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
மயா ம்ரு’ஷாவாக்யம்’ ந கத்²யத இதி நித்யம்’ ப்ரஸ²ம்’ஸநீயோ(அ)ஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய தாத ஈஸ்²வரோ ஜாநாதி| (aiōn g165)
32 ௩௨ தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்;
த³ம்மேஷகநக³ரே(அ)ரிதாராஜஸ்ய கார்ய்யாத்⁴யக்ஷோ மாம்’ த⁴ர்த்தும் இச்ச²ந் யதா³ ஸைந்யைஸ்தத்³ த³ம்மேஷகநக³ரம் அரக்ஷயத்
33 ௩௩ அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
ததா³ஹம்’ லோகை​: பிடகமத்⁴யே ப்ராசீரக³வாக்ஷேணாவரோஹிதஸ்தஸ்ய கராத் த்ராணம்’ ப்ராபம்’|

< 2 கொரிந்தியர் 11 >