< நீதிமொழிகள் 16 >

1 மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
內心策劃在於人,應允卻在於上主。
2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
對自己的行為,人都自覺無瑕;但審察心靈的,卻是上主。
3 உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
將你的作為委託於上主,這樣你的計劃必會成功。
4 யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
上主所造的各有其用意,連惡人也有不幸的一日。
5 மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
居心傲慢的,上主必厭惡;這一類的人,逃不掉懲罰。
6 கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
藉慈善忠誠,可補贖罪過;藉敬畏上主,可避免罪惡。
7 ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
世人的行徑,若中悅上主,他必使仇敵,再與他和好。
8 அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
收入少而守正義,勝於進款多而行不義。
9 மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
人心裏都策劃自己的行徑;但他的步伐卻由上主支配。
10 ௧0 ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
神明的斷語,出自君王口;他口下判斷,必不致差錯。
11 ௧௧ நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
天秤和稱盤,屬上主所有;囊中的法碼,全由他制定。
12 ௧௨ அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
君王最厭惡的是作惡,因為王位賴正義而立。
13 ௧௩ நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
正義的唇舌,為君王所喜悅;說話正直者,為君王所愛戴。
14 ௧௪ ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
君王的震怒,是死訊的使者;但是智慧人,能平息王怒。
15 ௧௫ ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
君王容光煥發,人即可活命;君王的恩澤,有如春雲時雨。
16 ௧௬ பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
獲得智慧,勝於獲得黃金;獲得智慧,勝於獲得白銀。
17 ௧௭ தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
正直人的行徑遠離邪惡,謹守行為的人必確保生命。
18 ௧௮ அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
驕橫是滅亡的先聲,傲慢是隕落的前導。
19 ௧௯ அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
謙下與貧民共處,勝於與驕傲人分贓。
20 ௨0 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
細聽勸言的,必將受益;信賴上主的,真是有福。
21 ௨௧ இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
有慧心的人,被稱為哲人;溫和的口吻,更具說服力。
22 ௨௨ புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
為有智識的人,智識是生命的泉源;然而糊塗愚昧,卻是愚昧人的懲罰。
23 ௨௩ ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
智慧人的心,使自己的嘴靈巧,使自己的唇舌,更具說服力。
24 ௨௪ இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
親切的言語,有如蜂蜜,使心靈愉快,使筋骨舒暢。
25 ௨௫ மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
有些道路,看來正直;走到盡頭,卻是死路。
26 ௨௬ உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
工人的胃口,催他勞作;工人的口腹,迫他工作。
27 ௨௭ வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
無賴之徒,圖謀邪惡;他的嘴上,似有火燒。
28 ௨௮ மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
乖戾的人,撒播爭端;告密的人,離間友情。
29 ௨௯ கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
強橫的人,誘惑朋友;引他走入不正之徒。
30 ௩0 அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
誰緊閉眼睛,是在策劃陰謀;誰緊咬口唇,邪惡業已完成。
31 ௩௧ நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
皓首白髮,是尊榮的冠冕;只在正義的道上,方可獲得。
32 ௩௨ பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
有涵養的人,勝於勇士;克服自己的人,勝於克城的人。
33 ௩௩ சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.
人儘可在懷中抽籤,但決斷卻在乎上主。

< நீதிமொழிகள் 16 >